இதயப் பூவும் இளமை வண்டும் – 79

”ஏய்..” சட்டென எழுந்து நின்ற சசியின் கையைப் பிடித்தாள் கவிதாயினி ”உக்காரு..டா..”

”இல்ல.. விடு நா.. போறேன்..” என்றான் முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு.

”ஹேய்.. ஏன்டா..”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Story : Mukilan

”ஸாரி..கவி.. விடு..”

”நா தப்பா ஏதாவது கேட்டுட்டனாடா..?”

”ஆமா..”

”ஸாரி..! அவதான் சொன்னா.. அப்படினு..” எனத் தயக்கத்துடன் சொன்னாள்.

”நம்பிட்ட இல்ல..?” முறைப்பாகக் கேட்டான்.

”இல்லடா.. சரி விடு.. அது உண்மை இல்லேன்னா..நீ ஏன் இவ்ளோ பீல் பண்ணிக்கனும்..? ஆள்கூட டல்லாகிட்ட.. அதான் புரியல..?” என அவள் புன்னகையுடன் சொல்ல..

சசியின் அம்மா சாப்பிடக்கொண்டு வந்தாள்.
அந்தப் பேச்சை அதோடு விட்டு.. விட்டு.. பொதுவாகப் பேசியவாறு.. சாப்பிட்டான் சசி.

கவிதாயினி கேட்டது அவனை வெகுவாக யோசிக்க வைத்தது. அது கவலை ரேகை படிந்த யோசணை.
அவனைப் பற்றின எல்லா விஷயங்களையும்.. ராமு மூலமாக புவிக்கும்.. அவள் மூலமாக கவிக்கும் தெரியவந்திருக்கலாம்.
கவியைப் பற்றி பயம் இல்லை.
ஆனால் இந்த புவி.. இவளோடு மட்டும்தான் நிறுத்தியிருப்பாளா..? இல்லை.. அவளது தோழிகளுக்கும் நிச்சயம் சொல்லியிருப்பாள்.

‘சே.. தேவடியாப் பெண்ணே உன்னை நேசித்த பாவத்திற்காக.. நான் எத்தனை வேதனைப் பட்டுவிட்டேன்.? இந்த வேதனை தேவைதான் எனக்கு..!’ என நினைத்துக் கொண்டான்.
‘நான் பொய்யானவனாக இருக்கலாம்.. ஆனால் என் காதல் பொய்யானது அல்ல. அது பொய்யானது இல்லை. பொய்யான காதலாக இருந்திருந்தால்.. அதன் தோல்வி என்னை இவ்வளவு பாதித்திருக்காது.. என்னை நிலைகுலைந்து போகச்செய்திருக்காது.. என் காதல் உண்மையானதுதான்.. ஆனால் நீதான் அதற்குத் தகுதியானவளாக இல்லை..’ என விரக்தியின் விளிம்பில்.. அவன் மனதை அவனே சமாதானம் செய்து கொண்டான்.

தன்னைவிட அவள் எந்தவகையிலும் தாழ்ந்தவள் இல்லை என்பதை அவனால் உணரமுடியவில்லை.
அதேசமயம்.. விருப்பும்.. வெறுப்பும்.. மாறி மாறி வரக்கூடிய இரண்டு நிலைகள்.. காலநிலையைப் பொருத்தவரை.. விருப்போ.. வெறுப்போ நிரந்தரமில்லை என்பதோ.. அவைகள் இரண்டும் எதிரெதிரானதுதானே திவிற.. வெவ்வேறானது அல்ல என்பதோ.. அப்போது தெரியவில்லை.. சசிக்கு..!!

அனேகமாக சசி நண்பர்கள் வட்டத்திலிருந்து..முற்றிலுமாக விலகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது அவனுக்கென்று குறிப்பிடும்படியான நண்பர்கள் கிடையாது.
எப்போதாவது சில சமயம்..சம்சுவையோ காத்துவையோ பார்த்தால்.. ஒருசில நிமிடங்கள் நின்று பேசுவான் அவ்வளவுதான்.
மற்றபடி அவர்களுடன் ஜாலியாக அரட்டையடிப்பதோ.. ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றுவதோ.. அறவே இல்லை.
அதயெல்லாம் சுத்தமாக மறந்து போனான்.

அதேசமயம் அவனது சோகங்களெல்லாம் ஓரளவு குறைந்திருந்தது. கவலையில் தன்னை அவன் மிகவும் வருத்திக் கொள்வதில்லை.
ஆனாலும் அவ்வப்போது அவன் மனது சுணங்கிப் போவதையும்.. அடிமனதில் நிரந்தரமான ஒரு வெறுமையுணர்வு தங்கிவிட்டதையும்.. அவனால் தவிர்க்க முடியவில்லை.

ஒருசில சமயங்களில் அவன் மனது ஏனென்றே தெரியாமல் விர்க்தி அடைந்துவிடும். காரணமற்று கலங்கித் தவிக்கும். தனிமையை ஏற்க முடியாமல் துவண்டு போகும் அதுபோண்ற தருணங்களில் அவனுக்கு ஆறுதலாக இருப்பது இருதயா மட்டும்தான்
அவளது காதல் அவன் மனதுக்கு அருமருந்தாக அமைந்தது. அவன் விரும்பாவிட்டாலும்.. அவளாக வந்து.. அவனோடு நெருக்கம் காட்டுவாள்.!!

”ஒரு விசயம் எனக்கு புரியல..” என ஆரம்பித்தாள் இருதயா.

” என்ன..?” என அவளைப் பார்த்தான்.

”நீங்க.. என்னை லவ் பண்றீங்களா இல்லையா..?” அவன் பக்கத்தில் நெருக்கமாக நின்றிருந்தாள்.

”ஏன்..?”

”இல்லன்னா.. வேற யாரையாவது.. லவ் பண்றீங்களா..?”

”ம்கூம்..!!”

”அப்றம் என்ன.. நானா வந்து.. வலிய வலிய பேசினாலும்.. அதுக்கு ரெஸ்பான்ஸ் தர மாட்டேங்கறீங்க..?”

” என்ன ரெஸ்பான்ஸ் தரனும்..?”

”ஒரு ஜாலியான பேச்சு.. ரொமாண்டிக் லுககு.. இப்படி எத்தனை இருக்கு..?”

”ஏய்.. நீ நல்ல பொண்ணாச்சே.. ஏன் இப்படி ஆகிட்ட..?” என அவன் கேட்க…

சிரித்தாள் ”ஏன்.. நல்ல பொண்ணுகள்ளாம் லவ் பண்ணக்கூடாதா..?”

”அப்படி இல்ல.. ஆமா.. நீ என்னை ஏன் செலக்ட் பண்ண..?”

” எதுக்கு..?”

”லவ் பண்ண..?”

”சே.. நா உங்கள செலக்ட் பண்ணி லவ் பண்ணல.. ஜஸ்ட்.. எனக்குள்ள தானா வந்த ஃபீல் இது..!” என்றாள்.

வெறுமனே புன்னகைத்தான் சசி.

”நீங்க.. என்னை லவ் பண்லேன்னாலும்.. நான் உங்கள லவ் பண்ணிட்டேதான் இருப்பேன்..! லவ் யூ லாட்..!!” என்றாள் இருதயா..!!

சசி சாப்பிடும்போது குமுதா கேட்டாள்.
”இருதயாவ லவ் பண்றியாடா..?”

”நானா..?” என நிமிர்ந்து அவளைப் பார்த்துக் கேட்டான்.

”ம்..பண்றதான..?”

” ஏய்.. அதெல்லாம் இல்ல..”

”டேய்.. ரெண்டு பேரும்.. இந்த குளிர்லயும் மொட்டை மாடில மீட் பண்ணிக்கறீங்க.. ரொம்ப நேரம் பேசறீங்க.. அப்றம் அதுக்கு பேரு.. என்னவாம்..?”

”ஏய்.. சாதாரணமா பேசிக்கறதுதான்.. நீ நெனைக்கற மாதிரிலாம் எதும் இல்ல..”

”ஆனா.. அவ என்னமோ உன்ன லவ் பண்ணிட்டுதான்டா இருக்கா.. அது மட்டும்.. என்னால கன்பார்மா சொல்ல முடியும்..”

”ஏய்.. நீ பாட்டுக்கு லூசுமாதிரி ஒளறிட்டிருக்காத.. அவள்ளாம் நல்ல பொண்ணு.. பேரு கெட்றும்..” என்றான் சசி.

”அப்ப சரிதான்..” என சிரித்தபடி எழுந்து போனாள் குமுதா.

சசி வேலைக்குக் கிளம்பியபோது ஏதேச்சையாக ராமுவைப் பார்த்தான்.
அவனும் பார்த்தான்.
ஜென்ம விரோதியைப் பார்ப்பதைப் போல ராமுவைப் பார்த்தான் சசி.
ராமு மீது இருந்த வன்மம் இன்னும் அவனுக்குக் குறைந்திருக்கவில்லை.

அண்ணாச்சி காலி செய்துவிட்டுப் போனபின்.. அந்தக் கடைகள் இன்னும் காலியாகவேதான் இருந்தது. வேறு யாரும் கடைவைத்திருக்கவில்லை.
அதைப் பார்த்தபோது இன்னும் அதிகமாக அவன் மனசு வலித்தது.

போகும் வழியில்போது.. கோவில் மேடையில் உட்கார்ந்திருந்த சம்சு.. ராமுவைப் பார்த்துவிட்டுக் கூப்பிட்டான்.
அவனுடன் பிரகாஷும் இருந்தான்.

சசி சைக்கிளில் நின்றபடியே சம்சுவிடம் கேட்டான்.
”என்னடா வேலைக்கு போகலியா.?”

”இல்லடா.. கொஞ்சம் வீட்ல வேலை..!” என்றான்.

பிரகாஷ் கையை மட்டும் ஆட்டினான். போதையில் அகலமாகச் சிரித்தான். அவன் கண்கள் கதகதவென இருந்தது.

”காலைலயே தலைக்கு ஏறிருச்சு போலருக்கு..?” என சசி கேட்க..

”ம்.. ஃபுல்லா பொகையடிச்சிருக்கான்..” என்றான் சம்சு.

”ம்.. பாத்தாலே தெரியுது..!”

”அப்றம்.. இன்னொரு விஷயம் தெரியுமா..?”

”என்ன..?”

”ராமு.. செம ஓட்டு.. ஓட்றான்டா.. உன் பக்கத்து வீட்டு புள்ளைய கூட்டிட்டு.. நேத்து.. கோயமுத்தூர் கூட்டிட்டு போயிருக்கான்.. புல் என்ஜாய் பண்ணிட்டு வந்துருக்கான்.! செம லக்குடா அவனுக்கு..” சம்சு சொன்னதைக் கேட்டசசிக்கு.. அடிவயிற்றில் யாரோநெருப்பு பற்ற வைத்தது போலிருந்தது.

சசி எதுவும் காட்டிக்கொள்ளாமல்.. உடனே பேச்சை மாற்றினான்.
”காத்து எப்படி இருக்கான்.. அவன பாத்தியா..?”

”ம்.. ரெண்டு நாள் முன்னாடி பாத்தேன்.. ஆளு நல்லாத்தான் இருக்கான்.! அப்றம் ராமு….”

”சரிடா.. நா போகட்டுமா.. எனக்கு டைமாச்சு..?” என கத்தரிக்க முயன்றான் சசி.

சம்சுக்கு புரிந்திருக்க வேண்டும். அவன் சிரித்து
”சரிடா.. நானும் இப்ப போய்ருவேன்..! லீவ் இருந்தா சொல்லுடா.. நாமெல்லாம் எங்காவது ஜாலியா போய்ட்டு வரலாம்..” என்றான்.

”சரிடா.. சொல்றேன்..!” என்றவன் பிரகாஷைப் பார்த்துக் கையசைத்துவிட்டுக் கிளம்பினான்.

இன்னிக்கு நாள் நல்லால்லையோ என நினைத்தான் சசி.
வீட்டில் இருந்து கிளம்பம்போதே.. ராமுவைப் பார்த்துவிட்டான்.
அடுத்தது சம்சு சொன்ன செய்தி.
என்னதான் சசி வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும்.. சம்சு சொன்னதைக் கேட்ட அவன் மனசு வேதனைப்படவே செய்தது.
‘கோயமுத்தூர் கூட்டிப் போய் சுற்றியவன்..அவளை சும்மாவா விட்டிருப்பான்..? சே..!’ அதை எண்ணியபோது.. அவனுக்கே தாங்கமுடியவில்லை.
என்னதான் முயன்றாலும்.. புவியைப் பற்றி நினைக்காமலும் அவனால் இருக்க முடியவில்லை..!
அன்றைய.தினமெல்லாம் மூடு அப்செட்டாகவே இருந்தான் சசி.
இரவு.. வேலை முடிந்து வீடு போனவன் நிம்மதியின்றித் தவித்தான். அவனுக்கு தண்ணியடித்தே ஆகவேண்டும் எனத் தோண்றியது.
குமுதா கணவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

பாரில் போய் உட்கார்ந்து.. இரண்டு பீர் குடித்தான்.
போதை அவனது மன உணர்வுகளை மாற்றியது.!

புவிக்கா இனி அழுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என முடிவு செய்தான்.
‘எந்த தேவடியா எப்படி போனா..எனக்கென்ன..? எவன்கூட போனால் என்ன..? அவளுக்காக நான் ஏன் இப்படி.. இடிந்து போகவேண்டும்..?’ என என்னென்னவோ நினைத்து அவன் மனதைத் தேற்றினாலும் அவன் மனசு என்னவோ.. தாயிடம் அடிவாங்கிய சிறுபிள்ளை போல.. புவியைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது.

தீவிரமான யோசணைகளுடனே.. பாரில் இருந்து கிளம்பினான் சசி.
மனதில் ஒருவிதமான வேகம்.. புத்துணர்வு பிறந்தது போலிருந்தது. அதே வேகத்தில் பைக்கைக் கிளப்பினான்.

அவன் பைக்கை வேகமாக ஓட்டி வந்து.. சத்தி ரோட்டில் திரும்ப.. அதேநேரம் ஊட்டியில் இருந்து வந்த பஸ்.. வளைவில் திரும்பியது.
அவன் வந்த வேகம் கண்டு ஊட்டி பஸ் சடன் பிரேக்கில் நிற்க..
சசி திரும்பிய வேகத்தில்.. ஊட்டி பஸ்க்காக வழிவிட்டு.. நின்றிருந்த.. அரசுப்பேருந்தை கடைசி நிமிடத்தில் கவனித்து.. பிரேக்கை அழுத்தினான்.
ஆனால்…..
‘டமால்..’ என ஒரு சத்தம்.
பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டான் சசி.

உடனடியாகக் கூட்டம் கூடிவிட்டது. ஓடிவந்த யாரோ அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். அவனால் சரியாக நிற்கமுடியவில்லை. காலில் நல்ல அடி.!
ஆனால் எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என்பதை அவனால் உணரமுடியவில்லை.

சில நிமிடங்களில் அந்த இடத்தில் நிறையப்பேர் கூடிவிட்டனர்
யாரோ குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். குடித்தான்.

உடனே ஒரு ஆட்டோ வரவழைக்கப் பட்டு.. அதில் ஏற்றப்பட்டான் சசி….!!!!

-வளரும்…..!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 79

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments