அன்புள்ள ராட்சசி – பகுதி 63

அசோக் அவ்வாறு பட்டென சொல்லவும்.. சிரித்துக்கொண்டிருந்த மீரா அமைதியானாள்..!! அவனுடைய முகத்தையே ஆசையாகவும், காதலாகவும் பார்த்தாள்.. அசோக்கும் மீராவை அதே மாதிரி ஒரு பார்வை பார்த்தான்..!! ஒருசில வினாடிகள்.. அப்புறம் அசோக் திடீரென கேட்டான்..!!

“நித்தியா உன் பேரு..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ம்ம்..!! அம்மாவுக்கு சின்னு.. மத்தவங்களுக்கு நித்தி.. முழுப்பேர் ஸ்ரீநித்தி..!!”

“ஸ்ரீநித்தியா..?? ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கு..!!”

“ஹாஹா.. யெஸ்..!!”

மெலிதாக சிரித்த மீரா, பிறகு அசோக்கின் கண்களை ஒருமாதிரி குறுகுறுவென பார்த்தவாறே,

“எனக்கு இன்னொரு பேரு கூட இருக்கு..!!” என்றாள் பாட்ஷா ரஜினி ஸ்டைலில்.

“இன்னொரு பேரா.. என்னா அது..??”

“உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட பேர்தான்..!!”

“என்னன்னு சொல்லு..!!”

“ஸ்ரீனி..!!”

“ஸ்ரீனியா..??” அசோக் இப்போது குழப்பமாக நெற்றியை சுருக்கினான்.

“யெஸ்.. ஸ்ரீனி..!! ஸ்ட்ரைக் ஆகுதா..??”

மீரா கேட்டுவிட்டு கண்சிமிட்ட.. அசோக் இப்போது சற்றே நிதானித்தான்..!! புத்தியை கூர்மையாக்கி தீவிரமாக யோசித்தான்.. ஒரு சில வினாடிகளிலேயே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்..!!

“ஹேய்.. என் டாடியை திட்டி லெட்டர் அனுப்புற அந்த.. அந்த லவ் பெயிலியர் ஃபேன்.. அது.. அந்த ஸ்ரீனியா..??”

“ஹாஹா.. எக்ஸாக்ட்லி..!!” மீரா கலகலவென சிரிக்க, அசோக் அதிசயித்துப் போனான்.

“அடிப்பாவி..!! அப்படினா.. அந்த லெட்டர்ல..”

“யெஸ்.. என் வீட்டு அட்ரஸ் இருக்கும்..!!”

அசோக் தலையை பிடித்துக்கொண்டான்..!! ‘இவளுடைய முகவரி இத்தனை நாளாய் என் வீட்டு அலமாரியிலேயே இருந்திருக்கிறது.. அது புரியாமல் நான் உலகம் முழுக்க இவளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்திருக்கிறேன்..!! இப்படியும் நடக்குமா..??’ அசோக்கிடம் இப்போது ஒருவகை சலிப்பும், மீரா மீதான செல்லக்கோவமும்..!! அந்த செல்லக்கோவத்துடனே அவளை திட்டினான்..!!

“ராட்சசி.. ராட்சசிடி நீ..!!!”

“ஹாஹாஹாஹா..!!!” மீரா அழகாக சிரித்தாள்.

அத்தியாயம் 31

சென்ற அத்தியாத்திலேயே கதை முடிந்துவிட்டது..!! அறுசுவை விருந்தை பருகி முடித்த பின்பும்.. இறுதியில் கொஞ்சம் இனிப்பு சுவைக்க விரும்புவர்களுக்காக மட்டுமே இந்த அத்தியாயம்..!!

அடுத்தநாளே அசோக் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டான்..!! ‘பின்னந்தலையில் அடிபட்டு அதிகப்படியான ரத்தம் வெளியானதால், ஒரு நீண்ட மயக்கம்..!! காயத்திற்கு கட்டு போட்டாயிற்று.. சிராய்ப்புகளுக்கு மருந்து பூசியாயிற்று..!! ஊடு கதிர்ப்படம் ஆராய்ந்து.. உட்காயம் ஏதுமில்லையென உறுதியும் செய்தாயிற்று..!! இனி அச்சப்படுவதற்கு அவசியம் ஒன்றும் இல்லை.. இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்..!!’ என்று சிகிச்சையளித்த மருத்துவர் தெளிவாகவே சொல்லிவிட்டார்..!!

சவூதியில் வேலைக்கான தனது ஒப்பந்தத்தை.. முறித்துக்கொள்வதாக மீரா முடிவெடுத்தாள்..!! அவளுக்கு வேலையும் விசாவும் ஏற்பாடு செய்திருந்த கன்ஸல்டன்ஸிக்கு.. நஷ்ட ஈடாக ஒரு கணிசமான தொகையை அழவேண்டி இருந்தது..!! கன்ஸல்டன்ஸியின் வாயை அடைக்கிற பணியை.. மீராவுக்கு அதிக சிரமம் தராமல், மணிபாரதியே கவனித்துக் கொண்டார்..!!

சவூதியில் உபயோகமாகும் என்று கருதி, மீரா வாங்கிய அந்த புத்தகம்.. திறக்கப்படாமல் மூடியே இருந்தது..!! செக்கின் செய்யப்பட்ட அவளுடைய ட்ராவல் பேக் மட்டும்.. ரியாத் வரை பயணித்து.. விமான நிலையத்தின் பொருள் பாதுகாப்பு அறையை நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு.. ஒருவாரம் ஆனதும் வேறொரு ஃப்ளைட் பிடித்து சென்னை திரும்பியது..!!

மீராவின் வீடு அபகரிக்கப்பட்டதால்.. அசோக்கின் வீட்டிலேயே அவள் தங்கிக்கொள்ளுமாறு ஆகிப்போனது..!! சங்கீதாவின் அறையிலேயே அவளுக்கென்று ஒரு எக்ஸ்ட்ரா படுக்கை..!! மீரா அசோக்கிடம் சொன்ன நான்கு பெயர்களுடன்.. மீரா என்பதுமே அவளுக்கு ஐந்தாவது பெயராக மாறிப் போனது..!! அசோக்கின் குடும்பத்தினர்.. நித்தி என்று அழைப்பதைவிட.. மீரா என்றே பெரும்பாலும் அழைத்தனர்..!!

—————————–XXXXXXXXXXXXX—————————–

அசோக்கின் வீட்டில்.. மீராவை எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அசோக்கிற்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று அவளுக்கு ஒரு நினைப்பிருந்தது அல்லவா..?? அந்த நினைப்பினை அவள் அறியாமலே தவிடுபொடியாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது..!! சிற்சிறு உரையாடல்கள்.. சிற்சிறு நடவடிக்கைகள்.. சிற்சிறு அணுகுமுறைகள் என.. எல்லாவற்றின் மூலமாகவும்.. ‘அசோக்கிற்கு மிகப் பொருத்தமானவள் அவள்தான்..’ என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தனர்..!!

“உன்னை மாதிரி அகம் புடிச்ச கழுதைக்குலாம் மீரா மாதிரி ஆளுதான் சரி.. அவதான் பதிலுக்கு பதில் திருப்பி குடுப்பா..!!” – பாரதி மகனை செல்லமாக கடிந்துகொள்வாள்.

“இது உனக்கு சொந்தமானது மீராக்கண்ணு.. உன் கைல இருக்கனும்ன்றதுதான் விதி.. இனி எப்போவும் இதை கழட்டக் கூடாது.. சரியா..??” – அசோக்கின் பாட்டி அந்த பரம்பரை மோதிரத்தை, மீராவின் விரலிலேயே மீண்டும் மாட்டிவிட்டாள்.

“இது நான் எழுதுன லேட்டஸ்ட் நாவல்மா.. படிச்சு பாரு..!! ஹ்ம்ம்ம்ம்.. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு டீசண்டா சொல்லி பழகனும்.. கன்னாபின்னான்னு திட்டலாம் கூடாது.. மாமா பாவம்ல..!! ஹாஹா..!!” – சிரிப்புடனே மருமகளின் கையில் புத்தகத்தை திணித்து செல்வார் மணிபாரதி.

“எல்லாம்.. மீரா இந்த வீட்டுல அடி எடுத்து வச்ச நேரந்தான்..!!” – காதல் நாய்களுக்கு வாரிசு பிறந்தது முதல்.. காவிரி அணையில் தண்ணீர் திறந்தது வரை.. நடக்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்.. மீராவின் வருகையுடன் முடிச்சு போட்டார் அசோக்கின் தாத்தா..!!

அவர்களுடைய மாசற்ற அன்பு மீராவின் மனதை வெகுவாக மாற்றியது..!! தான் வாழவேண்டிய இடம் இதுதான் என்பதை.. அவளுடைய உள்ளமே மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தது.. இந்த இன்பம் என்றும் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தது..!! அசோக்கை விட்டு பிரிந்து செல்ல நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.. அவளே விரைவில் புரிந்துகொண்டாள்..!!

கிஷோரின் பெற்றோர் அசோக்கின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்..!! ‘இந்த வீட்டுக்கு மருமகன்னா.. எங்களுக்கு நீ மக மாதிரிதான்..’ மீராவின் கன்னத்தை பற்றி அன்பை பொழிந்தாள் கிஷோரின் அம்மா..!! வந்தவர்கள் உண்டுமுடித்து கல்யாணப் பேச்சை எடுத்தபோது..

“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.. நான் டைரக்டரா ஆனப்புறந்தான் எல்லாம்..!!” அசோக் திடீரென குண்டை தூக்கிப் போட்டான்.

“ஆமாம்..!! நானும் ஒரு படம் தனியா சினிமாட்டோக்ராஃபி பண்ணப்புறந்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..!!” – அசோக்குடன் இணைந்துகொண்டான் அருமைத்தோழன் கிஷோர்.

இருவரையும் சமாதானம் செய்ய முயன்று.. இரண்டு குடும்பத்தினரும் தோற்றுப் போயினர்..!! வேறு வழியில்லாமல்.. ‘எப்படியும் போங்க’ என்று.. அவர்களுடைய எண்ணம்போலவே விட்டுவிட்டனர்..!!

பிறகு.. வேறொரு சந்தர்ப்பத்தில்.. தனிமையில் இருக்கையில்.. அசோக்கின் இடுப்பை இறுக்கிக்கொண்டு மீரா பெருமிதமாக சொன்னாள்..!!

“ஆமால்ல.. டைரக்டர் ஆகணும்ன்றது உன் கனவுல.. உன் லட்சியம்ல..?? நீ சொன்னது சரிதான் அசோக்.. உன் லட்சியத்துக்கு என்னால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக்கூடாது..!! நீ டைரக்டர் ஆகுற வரை நான் வெயிட் பண்றேன்டா..!!”

“ஐயையே..!! லட்சியம், கனவு.. அதுலாம் ஒரு எழவும் இல்ல..!!” அசோக்கோ முகத்தை சுளித்தான்.

“எ..என்ன சொல்ற நீ..?? அ..அப்புறம்.. அப்புறம் எதுக்கு அத்தை, மாமாட்ட அப்படி சொன்ன..??”

“உடனே கல்யாணம் வேணாம்னு தோணுச்சு.. அதான்..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..??”

“எப்படி சொல்றது.. ம்ம்ம்ம்ம்… நாம இதுவரை சரியாவே லவ் பண்ணல மீரா.. நாம பழகுன காலத்துலலாம், எப்பப்பாரு உன்கிட்ட அடியும் திட்டும்தான் வாங்கிட்டு இருந்திருக்கேன்.. ரொமான்ஸ்ன்றது சுத்தமா இல்ல..!! இப்போத்தான் நீ அந்த ரொமான்ஸ் மூட்க்கே வந்திருக்குற.. இப்போப்போய் உடனே கல்யாணம்னா..?? அதான்.. கொஞ்சநாள் இப்படியே ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு.. அப்புறமா மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்ற..??”

அசோக் இளிப்புடன் கேட்க.. மீரா அவனை உர்ரென்று முறைத்தாள்..!! சற்றுமுன் ஆசையாக தனது தோள் மீது எடுத்துப் போட்டிருந்த அவனது கையை.. இப்போது வெடுக்கென்று விசிறியடித்தாள்..!!

“சங்கீதா சொல்றது கரெக்ட்தான்டா.. சரியான கேடிப்பயடா நீ..!!”

“ச்சேச்சே.. அப்டிலாம் இல்ல மீரா..!!”

“ஹ்ம்ம்.. அந்தவகைல கிஷோர் அண்ணாவாவது லட்சியம், கனவுன்னு ஒரு குறிக்கோளோட இருக்குறார்..!!”

“ஹாஹா.. யார் சொன்னா..?? அவனுக்கும் அதுலாம் ஒன்னும் கெடையாது..!!”

“ஓ..!! அப்புறம் எதுக்கு அவரும் மேரேஜை தள்ளிப்போட்டாரு..??”

“பின்ன..?? மேரேஜ் ஆறதுக்கு முன்னாடியே.. இவ அவனைப்போட்டு இந்த காய்ச்சு காய்ச்சுறா.. மேரேஜ் மட்டும் ஆகிட்டா கேக்கவே வேணாம்..!! எவ்வளவுநாள் தள்ளிப் போகுதோ அவ்வளவுநாள் அவன் தலை தப்பிச்சது..!! அதான் பையனும் எனக்கு ஜால்ரா போட்டான்..!!”

“அடப்பாவிங்களா..!!!!!” மீரா வாயை பிளந்தாள்.

—————————–XXXXXXXXXXXXX—————————–

சங்கீதாவின் அறை மீராவின் அறையுமாகவும் ஆகிப்போனது என்று சொன்னேன் அல்லவா..?? சில சமயங்களில்.. அசோக் வந்து தங்கையின் அறைக்கதவை தட்டுவான்..!! கதவு திறக்கிற சங்கீதா கடுப்புடன் அண்ணனை முறைப்பாள்..!!

“என்ன வேணும்..??”

“மீரா இருக்குறாளா சங்கு..??” அசோக் குழைவான்.

“அண்ணி தூங்குறாங்க..!!”

“கொஞ்சம் எழுப்பேன்..!!”

“எதுக்குன்னு சொல்லு..!!”

“பேசணும்..!!”

“நைட் பதினோரு மணிக்கு என்ன பேச்சு வேண்டி கெடக்கு..?? காலைல பேசிக்கலாம்.. ரூமுக்கு போ..!!”

“கொஞ்ச நேரம் சங்கு..!!”

“ப்ச்.. சொல்றேன்ல..?? நைட் பத்து மணிக்கு மேல உன்னை அண்ணி பக்கத்துல விடக்கூடாதுன்னு மம்மியோட ஆர்டர்..!! போ போ.. எல்லாம் காலைல பேசிக்கலாம்..!!”

“ப்ளீஸ்டி..!!”

“இப்போ போறியா இல்லையா..??”

“ஹேய்.. கொஞ்ச நேரம்..!!”

“மம்மீஈஈஈ…!! இங்க வந்து பாரு உன் புள்ளைய..!!”

சங்கீதா அந்தமாதிரி சப்தம் எழுப்பியதும்.. அசோக் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டை நோக்கி ஓடுவான்..!! கதவை மூடிவிட்டு சங்கீதா படுக்கையில் சரிகையில்.. பக்கத்தில் படுத்திருக்கும் மீரா அவளுடைய புஜத்தை சொறிவாள்..!!

“சொல்லுங்க அண்ணி..!!”

“உங்க அண்ணனை பாத்தா பாவமா இருக்கு சங்கி..!!”

“அதுக்கு..??”

“நான்வேணா கொஞ்சநேரம் போய் பேசிட்டு வரனே..??”

மீரா ஏக்கமாக கேட்க, சங்கீதா அவளையும் ஒரிரு வினாடிகள் முறைப்பாள்.. பிறகு காட்டு கத்தலாக கத்துவாள்..!!

“மம்மீஈஈஈ…!! இங்க வந்து பாரு உன் மருமகள.!!”

அவ்வளவுதான்.. மீரா போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு சுருங்கிப் போவாள்..!!

அசோக்கும் மீராவும் ஒன்றிணைந்து ஒருவாரம் கழித்து..

அப்போதுதான் ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியிருந்த அசோக்.. வந்ததுமே அலமாரியை துழாவி அன்றைய நாளிதழை வெளியே எடுத்தான்..!! காலையிலேயே வாசிக்காமல் விட்டதற்காக தன்னைத்தானே கடிந்துகொண்டு.. கவனமுடன் இப்போது அந்தச்செய்தியை வரிவரியாக வாசித்தான்..!!

“அப்படி என்ன இன்ட்ரஸ்டிங் ந்யூஸ்..??”

பின்பக்கம் இருந்து மீராவின் குரல் கேட்டதும்.. அசோக் பதறிப் போனான்..!! அவசரமாக அந்த நாளிதழை தனது முதுகுப்புறமாக மறைத்தவன்.. மீராவை ஏறிட்டு திணறலும், குழறலுமாய் சொன்னான்..!!

“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல மீரா..!!”

அவனுடைய திருட்டு முழியே, ஏதோ விஷயம் இருக்கிறது என்று மீராவுக்கு காட்டி கொடுத்துவிட்டது. குழப்பமாக புருவத்தை நெறித்தாள்.

“எ..என்னாச்சு.. ஏன் ந்யூஸ் பேப்பரை மறைக்கிற..??”

“நா..நான் எங்க மறைச்சேன்.. நா..நான் சும்மா..”

“இல்ல.. பொய் சொல்ற.. எதையோ மறைக்கிற.. ந்யூஸ் பேப்பரை குடு..!!”

“ப்ச்.. அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!”

“ம்ஹூம்.. ஏதோ இருக்கு.. குடு அதை..!!”

“இல்ல மீரா..!!”

“ப்ச்.. குடுன்றேன்ல.. குடு..!!”

அசோக்கின் கையிலிருந்து அந்த நாளிதழை மீரா வலுக்கட்டாயமாக பிடுங்கினாள். முதல் பக்கத்திலேயே வெளியாகிருந்த அந்த செய்தியின் மீது பார்வையை வீசினாள்.

“ரெட்ஹில்ஸ் ரெட்டைக் கொலை வழக்கில் துப்பு துலங்கியது..!! கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகள் போலீசாரால் கைது..!!”

செய்தித் தலைப்புக்கு அருகிலேயே.. கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேர்களின் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படங்களும் அச்சிடப் பட்டிருந்தன..!! மீரா முணுமுணுப்பான குரலில் விரிவான செய்தியை மேலும் வாசித்தாள்..!!

“சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காசி (வயது 31). தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கல்லூரி மாணவர்களுக்கும், பணக்கார இளைஞர்களுக்கும் சட்ட விரோதமாக விநியோகிப்பதை தொழிலாக கொண்டவர். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். கடந்த மாதம் 28-ந்தேதி, காசியும் அவரது நண்பர் விஜயசாரதி (வயது 27) என்பவரும், ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக ரெட்ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட புலன்விசாரணையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு துப்பு துலங்கியிருக்கிறது. கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகளும் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.”

“கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அல்ஃபோன்ஸ்தான், வழக்கமாக காசிக்கு போதை மருந்து சப்ளை செய்பவர். இருவருக்கும் சில மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்திருக்கிறது. காசி தனக்கு நாற்பது லட்ச ரூபாய் பணம் தர வேண்டி இருந்ததாகவும், அதைத்தராமல் அவர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து காசியை கொலை செய்ததாகவும் அல்ஃபோன்ஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் சற்றும் சம்பந்தம் இல்லாத விஜயசாரதியும், காசியை கொலை செய்ய வந்தவர்களிடம் சிக்கி தானும் கொலையானதுதான் மிகவும் பரிதாபகரமான..” வாசித்தது போதுமென்று இடையில் நிறுத்திய மீரா,

“ஹ்ம்ம்.. இப்போவாவது ஒருவழியா கண்டுபிடிச்சாங்களே.. இந்தப் பிரச்சினையில தேவை இல்லாம நான் மாட்டிப்பனோன்னு ரொம்பவே பயந்துட்டேன் அசோக்..!! என் பக்கம் மட்டும் சந்தேகம் திரும்பி இருந்துச்சுன்னு வச்சுக்கோ.. அவ்வளவுதான் நான்.. காலி..!!” என்று நிம்மதியான குரலில் சொன்னாள்.

“ஏன் அப்டி சொல்ற..??”

“பின்ன என்ன..?? நான் கொலை பண்ணலைன்னு உன்னை நம்பவைக்கவே அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. போலீஸ்ட்ட என்னத்த சொல்லி நம்ப வைக்கிறது..??”

“என்ன பண்ண சொல்ற.. அந்த எடத்துல உன் பென்டன்ட் பாத்ததும் எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!”

“எப்படி.. நான்தான் ரெண்டு பேரையும் கொலை பண்ணிருப்பேன்னா..??”

“ஆமாம்..!!”

“ஹ்ம்ம்.. ஆக்சுவலா அதுதான் நடந்திருக்கும்.. அந்தப்பொறுக்கியை போட்டுத்தள்ற ப்ளான்லதான் அங்க போனேன்.. அவ்ளோ ஆத்திரம் எனக்கு..!! ஆனா.. ஒரு அஞ்சு நிமிஷ கேப்புல.. எனக்கு முன்னாடி இவனுக முந்திக்கிட்டானுக..!! வீட்டுக்குள்ள நுழையுறேன்.. அந்தப்பொறுக்கி அப்படியே ரத்த வெள்ளத்துல கெடக்குறான்.. கூடவே இந்த காசி வேற.. செம ஷாக் எனக்கு..!!”

“ம்ம்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments