அன்புள்ள ராட்சசி – பகுதி 26

“என் பெட்ரூம் ஜன்னல் வழியா பார்த்தா.. அதுதான் பெருசா தெரியும்..!! இத்தனை நாளா ஏதோ ஒரு ஜ்வல்லரி ஆட் வச்சிருந்தாங்க.. இன்னைக்கு காலைல கண்ணுமுழிச்சதும்.. அப்படியே பெட்ல கெடந்துக்கிட்டே.. ஜன்னல் வழியா வெளில பார்த்தா.. ரியல் சர்ப்ரைஸ் எனக்கு..!!”

“எ..என்ன..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“கவாஸாகி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருந்தாங்க.. அந்தப் பையனும், பொண்ணும் பைக்ல பறக்குற மாதிரி ஸ்டில்..!! நல்லா பெருசா.. சும்மா நச்சுனு..!!”

“ஓ..!!”

“என்னன்னு தெரியல.. அதை பாக்குறப்போ ரொம்ப பெருமையா இருந்தது.. மனசு ஃபுல்லா உன் நெனைப்பு.. ரொம்ப நேரம் அந்த போர்டையே பாத்துட்டு இருந்தேன்..!!” மீரா பெருமிதமாக சொல்ல, அசோக் அவளையே காதலாக பார்த்தான்.

“ம்ம்..!!”

“ஆனா.. கொஞ்சம் கடுப்பாவும் இருந்தது..!!”

“எதுக்கு..??”

“அந்த விளம்பரத்தை எடுக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்ருப்ப..?? அந்த போர்ட்ல ஒரு மூலைல கூட உன் பேர் போடல..!! உன் பேரை போட்டா என்ன கொறைஞ்சா போயிடுவானுக..?? கவாஸாகின்னு மட்டும் மெகாசைஸ்ல போட்டு வச்சிருக்கானுக..!! ஸ்டுபிட்ஸ்..!!”

“ஹாஹா..!! கஷ்டப்பட்டதுக்குத்தான் காசு தந்துட்டாங்களே மீரா.. பேர்லாம் எதுக்கு போடப் போறாங்க..?? அதுமில்லாம.. அது அவங்க பைக்கை ப்ரோமோட் பண்றதுக்காக வச்சிருக்குற போர்ட்.. அதுல என் பேரை போட்டு, என்னை ப்ரோமோட் பண்ண சொல்றியா..??”

“ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இருந்தாலும் மனசு கேக்கலை..!! அந்த போர்ட் பார்த்ததும் எனக்கு இன்னொரு ஆசை வேற..!!”

“என்ன..??”

“கூடிய சீக்கிரம்.. அதே போர்ட்ல.. நீ டைரக்ட் பண்ணப்போற மூவியோட அட்வர்டைஸ்மன்ட் வரணும்.. ‘எண்ணமும், இயக்கமும் அசோக்’னு.. பெருசா உன் பேரோட..!! காலைல எந்திரிச்சதும்.. அந்த போர்ட்ல நான் கண்ணு முழிக்கணும்..!!”

உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும்.. உண்மையான ஆசை தெறிக்குமாறு.. மீரா அப்படி சொல்ல.. அசோக் அவளுடைய அழகு முகத்தையே.. அன்பு பொங்கப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!

அப்போதுதான் மீரா திடீரென.. ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் கத்தினாள்..!!

“ஹேய் அசோக்.. அங்க பாரு அங்க பாரு.. அதேதான்.. அதைத்தான் சொன்னேன்.. ஸேம் ஸ்டில்.. ஸேம் சைஸ்..!!”

அசோக் இப்போது தலையை குனிந்து பேருந்துக்கு வெளியே பார்த்தான். அந்த ஃப்ளக்ஸ் போர்ட் பார்வையில் பட்டது. மழைத்தூறலின் பின்னணியும், மஞ்சள் விளக்கின் வெளிச்சமுமாய்.. கூரிய பார்வையுடன் சாலை வெறிக்கும் அவனும், குதுகலத்துடன் துப்பட்டா விரிக்கும் அவளுமாய்.. சினம் கொண்ட சிங்கம் போல, சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற கவாஸாகி..!!

“காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!” என்ற வார்த்தைகள் பொன்னிறத்தில் ஜொலித்தன.

“எப்டி..??? செமையா இருக்குல..???”

முகமெல்லாம் பூரிப்பாக.. குரலெல்லாம் உற்சாகமாக.. குழந்தைக்கே உரிய சந்தோஷத்துடன் மீரா அவ்வாறு கேட்க.. ‘எப்போதிருந்தடி நீ இப்படி மாறிப்போனாய்..??’ என்பது போல.. அசோக் அவளையே வித்தியாசமாக பார்த்தான்..!!

மீராவிற்கு அசோக்கிடமும், அவனுடைய தொழில் மீதும் மட்டும் புதிதாக அக்கறை பிறக்கவில்லை..!! முன்பெல்லாம் அசோக்கின் நண்பர்களை அவள் மதிக்கவே மாட்டாள். அறிமுகம் செய்து வைத்த நாளுக்கப்புறம், அவர்களை அருகிலேயே அவள் அண்ட விடுவதில்லை. அவள் முன்பே சொல்லியிருந்த மாதிரி, எப்போதும் தூரத்திலேயே அவர்களை நிறுத்தி வைத்திருப்பாள். சில நேரங்களில்.. அவள் ஃபுட் கோர்ட்டுக்கு தாமதமாக வருகிற தருணங்களில்.. அசோக் தன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்தால்.. அவர்களை கடந்து செல்கிற மீரா, ஒரு முறைப்பான பார்வையுடனே.. ‘ம்ம்.. எந்திரிச்சு வா..’ என்று அந்த பார்வையாலேயே அவனுக்கு சொல்லி.. அவனை மாத்திரம் தனியாக கிளப்பிக் கொண்டு செல்வாள்..!!

ஆனால் இப்போதெல்லாம்.. இவளும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.. அவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டே உணவருந்துகிறாள்..!!

“இன்னைக்கு என்ன.. சாலமன் அண்ணாவ ஆளை காணோம்..??” மீராவின் கேள்விக்கு,

“அவனுக்கு ஏதோ உடம்பு சரி இல்ல..!!” கிஷோர் பதில் சொன்னான்.

“ஓ..!! என்னாச்சு..??”

“ஃபீவர்னு நெனைக்கிறேன்..!!”

“என்னது.. நெனைக்கிறீங்களா..?? என்ன ஃப்ரண்ட்ஸ் நீங்க..??” கிஷோரை சற்றே கடிந்து கொண்ட மீரா, வேணுவிடம் திரும்பி,

“வேணு அண்ணா.. உங்க செல்ஃபோன் கொஞ்சம் கொடுங்களேன்..!!” என்று உரிமையாக அவனுடைய செல்போனை வாங்கி, சாலமனுக்கு கால் செய்தாள்.

“ஆங்.. அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!”

“உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க.. என்னண்ணா ஆச்சு..??”

“ஓ..!! டாக்டர்ட்ட போனீங்களா..??”

“ஹையோ.. ஏண்ணா இப்படி பண்றீங்க..??”

“சரி.. நான் ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா..?? ஒரு டேப்லட் சொல்றேன்.. அதை இப்போ ஒன்னு.. நைட் ஒன்னு போடுங்க.. காலைல எல்லாம் சரியாயிடும்..!!”

மீரா சாலமனுக்கு ஃபோனிலேயே மருந்து பரிந்துரைக்க.. வேணு, கிஷோருடன் சேர்ந்து.. அசோக்குமே அவளை வியப்பாக பார்த்தான்..!!

ஆமாம்..!! மீராவின் இந்த மாதிரியான மாற்றங்கள்.. வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே அசோக்கிற்கு இருந்தன..!! அவனுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிற மாதிரி.. ஒருநாள் நள்ளிரவு அசோக்கிற்கு கால் செய்தாள்..!! அதற்குமுன்பே ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்த அசோக்.. உறக்கம் கலைந்தும், கலக்கம் களையாமலே.. கால் பிக்கப் செய்து..

“ஹலோ..!!” சொன்னான்.

“என்னப்பா தூங்கிட்டியா..??” அடுத்த முனையில் மீராவின் குரல் மிக மென்மையாக ஒலித்தது.

“ம்ம்ம்ம்..!! எ..என்னாச்சு.. இந்த நேரத்துல கால் பண்ணிருக்குற..??”

“ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா..”

“ஹ்ம்.. இன்னும் தூங்கலையா நீ..??”

“இ..இல்ல.. தூக்கம் வரல..!!”

“ஏன்..??”

“தெரியல..!!”

“தெரியலையா..?? என்ன சொல்ற..?? எனக்கு புரியல..!!”

“அ..அசோக்..”

“ம்ம்..”

“உ..உன்கிட்ட.. ஒன்னு சொல்லனும்..”

“என்ன..??”

“அ..அது.. அ..அதை எப்படி..”

மீரா சொல்ல வந்ததை சொல்லாமல்.. தயங்கி தயங்கி இழுத்தாள்..!! பிறகு அதுவுமில்லாமல் சில வினாடிகள் அவள் அமைதியாகிப் போக, அசோக்கிற்கு கொட்டாவி வந்தது..!!

“ஹ்ஹாஹாஹா.. என்ன மீரா.. சீக்கிரம் சொல்லு..”

“தூக்கம் வருதா உனக்கு..??”

“ம்ம்..”

“சரி.. தூங்கு..”

“நீ ஏதோ சொல்ல வந்த..??”

“காலைல சொல்றேன்..!!”

அவ்வளவுதான்.. காலை கட் செய்துவிட்டாள்..!! அசோக் சில வினாடிகள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தான்.. பிறகு அவனது வாயைக் கிழித்துக்கொண்டு, பெரிதாக ஒரு கொட்டாவி வெளிப்பட.. கண்கள் செருகிப்போய் பொத்தென மெத்தையில் கவிழ்ந்தான்..!!

தனது மனதில் ஏற்பட்ட குழப்பத்தையும் வியப்பையும் பற்றி.. மீராவிடம் கேட்கவும் அசோக் தவறவில்லை.. அவ்வப்போது அவளிடம் அதுபற்றி பேசுவான்..!! ஆனால்.. அப்படி அவன் பேசியதால் ஏதாவது பிரயோஜனம் உண்டா என்று கேட்டால்.. இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. தொடர்ந்து ஒரு குழப்ப நிலையிலேதான் அவன் இருக்க வேண்டி இருந்தது..!! இப்படி நள்ளிரவு மீரா கால் செய்தாள் அல்லவா.. அதற்கு அடுத்த நாள் கூட.. அசோக் மீராவிடம் அவனுடைய குழப்பம் பற்றிய பேச்சை எடுத்தான்..!!

“மீரா..”

“ம்ம்..”

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது..!!”

“எ..என்ன..”

“உ..உனக்கு ஏதாவது பிரச்னையா..??”

“ஹ்ஹ.. ஏன் அப்படி கேக்குற..??”

“எனக்கு அந்த மாதிரி தோணுச்சு..!!”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. எ..எனக்கு என்ன பிரச்னை.. ஐ’ம் ஆல்ரைட்..!!”

“இல்ல.. நீ முன்னாடி மாதிரி இல்ல..!!”

“ஓ.. வேற எப்படி இருக்குறேன்..??”

“உன்னோட யூஷுவல் சிரிப்பு, கேலி, கிண்டல்.. எதுவுமே இப்போ உன்கிட்ட இல்ல..!! ரொம்ப அமைதியா.. ரொம்ப சாஃப்டா மாறிட்ட..!! எந்த நேரமும் எதையாவது சீரியஸா யோசிச்சுட்டே இருக்குற.. மூஞ்சில ஒரு களையே இல்ல.. ஏதோ சோகத்துல இருக்குற மாதிரியே இருக்குற..??”

“ப்ச்.. அது ஒன்னும் இல்ல.. ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்ல.. அதான்..!! அப்பா தயவு இல்லாம சொந்தக்கால்ல நிக்கனும்னு வைராக்கியம்.. நல்ல வேலையா கெடைக்கனுமேனு கவலை.. லைஃப் பத்தி திடீர்னு ஒரு பயம்.. அவ்வளவுதான்..!!”

“நெஜமா அவ்வளவுதானா..??” அசோக் நம்பிக்கையில்லாமல் கேட்க,

“அவ்வளவுதான்.. வேற என்ன..??” மீரா கூலாக திருப்பி கேட்டாள்.

“ஹ்ம்ம்ம்..!! சரி.. அதைவிடு.. நேத்து நைட்டு எதுக்கு கால் பண்ணின..??”

“அ..அதான் சொன்னனே.. சும்மா..!!”

“இல்ல… நீ எதோ சொல்ல வந்த..”

“என்ன சொல்ல வந்தேன்..??”

“ப்ச்.. என்கிட்ட ஏதோ சொல்லனும்னு ஆரம்பிச்சியே..??”

“அ..அதுவா..?? அ..அது ஒன்னுல்ல.. ஜஸ்ட் குட் நைட் சொல்ல வந்தேன்..!!”

“அப்புறம் ஏன் சொல்லமாலே வச்சுட்ட..??”

“நீதான் அதுக்கு முன்னாடியே தூங்கிட்டியே..?? அப்புறம் எதுக்கு சொல்லனும்னு..”

“அப்போ காலைல சொல்றேன்னு சொன்னது..??”

“அதான் இப்போ சொல்லிட்டு இருக்குறனே..??”

அவ்வளவுதான்..!! அதற்கு மேல் அசோக்கிற்கு அவளிடம் என்ன கேட்பது என்று புரியவில்லை. அமைதியாகிப் போனான். அவனுடய குழப்பம் முழுமையாக தீராமல் போனாலும், ஒரு அளவுக்கு மேல் மீராவை துளைத்து எடுப்பதை அவன் விரும்பவில்லை. நேரம் வரும்போது அவளே சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டான். அதுவுமில்லாமல்.. தனது குழப்பமே முதலில் நியாயமானதுதானா என்றொரு சந்தேகமுமே அவனுக்கு இருந்தது..!! அந்த சந்தேகம்தான் தன் அம்மாவிடம் இந்த விஷயம் பற்றி அவனை பேச தூண்டியது.. அதுவும் அடிக்கடி..!!

அது சங்கீதாவின் அறை..!! வளமாக குரலை மாற்றும் பொருட்டு.. வாயில் ஒரு சித்தரத்தையை வைத்து கடித்துக்கொண்டு.. மூச்சை உள்ளடக்கி பயிற்சி செய்தவாறு.. அம்மாவும் அண்ணனும் பேசிக்கொள்வதை, ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா..!! மடியில் லேப்டாப்புடன் இருந்த அசோக்.. இணையத்தில் சமையற் குறிப்பு தேடச்சொன்ன பாரதியை.. மீரா பற்றி பேசி மொக்கை போட்டுக் கொண்டிருந்தான்..!! பாரதி ஏற்கனவே பலமுறை அசோக்கின் பிரச்சனையை கேட்டு கேட்டு.. சலித்துப் போயிருந்தாள். .!!

“அவ ஏன் மம்மி இப்படிலாம் பண்றா..??”

“அப்படி என்னடா பண்ணிட்டா..??”

“இன்னைக்கு பாலாஜி அட்வர்டைஸிங்ல ஒரு டிஸ்கஷன்ல இருந்தேன்.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவும்.. இவ ரிஷப்ஷனுக்கே கால் பண்ணிருக்கா..!!”

“சரிஈஈ..!!”

“கால் பண்ணவ என்ன கேட்ருக்கா தெரியுமா..??”
“என்ன கேட்ருக்கா..??”

“அசோக் ஸார் இருக்காரான்னு கேட்ருக்கா மம்மி..!!” தனக்கு நேர்ந்துவிட்ட ஏதோ பெரிய அவமானத்தை சொல்வது போல அசோக் சொன்னான்.

“ஹ்ம்ம்.. அதுக்கு என்ன..??” பாரதி கூலாகவே கேட்டாள்.

“அதுக்கு என்னவா..?? இவ எதுக்கு என்னை ஸார்னுலாம் சொல்றா..??”

“ஆமாம்.. இவனை ஸாருனுலாம் சொல்லிருக்க கூடாது.. புளிச்சுப்போன மோருன்னு சொல்லிருக்கணும்..!!” சங்கீதா சித்தரத்தையை ஓரமாய் ஒதுக்கிக்கொண்டு, கடுப்புடன் சொன்னாள்.

“ஏய்.. சும்மா இருக்க மாட்ட..” மகளை அதட்டிய பாரதி,

“ம்ம்.. நீ சொல்லுடா..!!” என்றாள் மகனிடம் திரும்பி.

“என்னத்த சொல்ல.. டிஸ்கஷன் முடிஞ்சு வெளில வந்தா.. ‘ஸார்.. அசோக் ஸார்.. உங்களுக்கு ஸார்.. ஒரு கால் ஸார்..’ அப்டின்னு.. அந்த ஓட்டைப்பல்லு ரிஷப்ஷனிஸ்ட் என்னை ஓட்டுறா மம்மி..!! இந்த மீரா ஏன் இப்படிலாம் பண்றா.. எதுக்கு இப்படி ஸார்னுலாம் மரியாதை..??”

“சரிடா.. கட்டிக்கப்போறவனை அடுத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்க கூடாதுன்னு அப்படி சொல்லிருப்பா..!! அதை விடு.. சாப்பாட்டு விஷயத்துல அவ எப்படி.. நல்லா கைநெறைய அள்ளி சாப்பிடுவாளா.. இல்ல அப்படியே கோழி மாதிரி கொறிப்பாளா..??”

“அதுலாம் நல்லா சாப்பிடுவா.. ஆள் பாக்குறதுக்குத்தான் கொத்தவரங்காய் மாதிரி இருப்பா.. ஆனா பத்துப்பேர் தீனியை ஒத்தை ஆளா தின்பா..!!”

“ஆங்.. காய்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. அவளுக்கு வெண்டைக்காய் பிடிக்குமா..??”

“அவளுக்கு மிரப்பக்காய்தான் ரொம்ப பிடிக்கும்..!!”

“மிரப்பக்காயா..?? அப்படினா..??”

“தெலுங்குல மிளகாய்ன்னு அர்த்தம் மம்மி..!!”

“மிளகாயா..??” பாரதி ஒருமாதிரி முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.

“ஆமாம்..!! அதுவும் ஜானி வாக்கரோட சேர்த்து சாப்பிட்டா.. ரொம்ம்ம்ம்ப பிரியம்..!!”

“ஓ..!!!”

“அதை விடு மம்மி.. அதுவா இப்போ முக்கியம்..?? நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்..!!”

“ப்ச்.. என்னடா உன் பிரச்னை இப்போ..??” பாரதியின் குரலில் சலிப்பு மிகுந்து போயிருந்தது.

“அவ ஒன்னும் சரியில்ல மம்மி..!! ஏதோ ஆயிருச்சு அவளுக்கு.. என்னன்னவோ சொல்றா தெரியுமா..!!”

“ஹ்ம்ம்.. என்ன சொன்னா..??”

“நேத்து சும்மா பேசிட்டு இருக்குறப்போ திடீர்னு..”

“ம்ம்..”

“நீ ரொம்ப அழகா இருக்குற அசோக்னு சொல்றா மம்மி..!!” அசோக் சோகமாக சொல்ல, இப்போது சங்கீதா இடையில் புகுந்து..

“அதுசரி.. அழகா இருக்குறன்னு சொன்னாங்களா.. அப்போ அண்ணிக்கு ஒரு அப்பாயிண்ட்மண்ட் வாங்கிட வேண்டியதுதான்..!!” என கிண்டலாக சொன்னாள்.

“அப்பாயிண்ட்மண்டா..?? எங்க..??” அசோக் தங்கையிடம் திரும்பி குழப்பமாக கேட்டான்.

“ம்ம்..?? வாசன் ஐ கேர்ல..!!” சங்கீதாவின் கேலி, பாரதியை டென்ஷனாக்கியது.

“ஏய்.. திமிரா உனக்கு..?? எம்புள்ளை அழகுக்கு என்னடி கொறைச்சல்..??” சங்கீதாவிடம் எகிறிய பாரதி, பிறகு அசோக்கிடம் திரும்பி,

“ஏண்டா.. அழகா இருக்குறன்னு சொன்னது ஒரு குத்தமா..?? அழகாதான இருக்குற நீ..??”

“ஐயோ.. நான் அழகா இருக்குறன்னு எனக்கு தெரியாதா..?? ஆனா.. அவ அதெல்லாம் சொல்ற ஆளு இல்ல மம்மி..!! எப்போவாவது நான் பேசுறது புடிச்சிருந்தா.. ‘ச்சோ ச்வீட்’னு சொல்வா.. மத்தபடி என்னோட அப்பியரன்ஸலாம் கவனிச்சு அப்ரெஷியேட் பண்ற ஆளு இல்ல அவ..!!’

“சரி அதை விடு.. ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டா..!! ம்ம்ம்ம்.. நீ ஸ்வீட்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. மீராவுக்கு அல்வா பிடிக்கும்ல..??” பாரதி அந்தப்பேச்சை தனக்கு சாதகமாக திருப்ப படாதபாடு பட்டாள்.

“ம்ம்.. அரைப்படி மொளகாப்பொடிய கொட்டி.. அல்வாவை கிண்டி வையி.. நல்ல்ல்லா சாப்பிடுவா..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments